குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பௌத்த சான்றுகளை கொண்ட ஒரு இடமாகும் என பதில் தொல்பொருள் பணிப்பாளர்
நாயகம் ஆரே சினத் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். தொல்பொருள் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பிற்குள் ஏதேனும் ஒரு புதிய கட்டடத்தையோ அல்லது நிர்மாணத்தையோ மேற்கொள்வது சட்ட விரோதமானது என்பதுடன் அது 34ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். புத்த சாசன சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு மேலதிக செயலாளர் தேசிய மரபுரிமைகள் பிரிவின் ஊடாக பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆரே சிரத் விக்ரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்