×

ஐஸ் போதை பொருளோடு பாடசாலை ஆசிரியர்  கிண்ணியா போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கென்னியா காவல்துறை பிரிவுக்கு உட்பட்டு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று காலை இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 32 கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலீசார் தெரிவித்தனர். சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் இந்த திடீர் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது சந்தக நபரை பரிசோதித்ததில் அவரிடமிருந்து இந்த போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல் துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளின் போது இவர் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தக நபர் கிண்ணியா குறிஞ்சாங்கணி அரப ஆண்கள் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றி வருபவர். சந்தக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115