×

சிறுமி ஒருவரை பாலியல் துஸ்ப்பியோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அத்தமஸ்தானாதிபதி பல்லிகம ஹேமரட்ன தேரரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக இரத்த மாதிரியை வழங்குமாறு அனுராதபுர பிரதம நீதிபதி சியபத் சசிந்த விக்ரமரட்ன நேற்று உத்தரவிட்டார். நேதிமற்ற உத்தரவின்படி சந்தக நனபர் ஜூன் 16 ஆம் தேகதி அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நேரில் சென்று தனது இரத்த மாதிரியை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேத்தம்புவ பொலீசார் சமர்ப்பித்த கூடுதல் அறிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான ஆவணங்கள் 2026 மே நான்காம் தேகதி அரசாங்க பகுப்பாய்வளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன. வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்டவருடன் தொடர்புடையதாக சந்தகிக்கப்படும் ஆடைகள் மற்றும் பிறப்பொருட்களில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் பரிசோதனைகளில் டிஎன்ஏ தொடர்பான முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலீசார் நீதிமன்றில் தெரிவித்தனர். இந்த டிஎன்ஏ முடிவுகளை சந்தக நபரின் இரத்த மாதிரியோடு ஒப்பிட்டு உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனை பரிசீலித்த நீதிபதி டிஎன்ஏ பரிசோதனைக்கு தேவையான இரத்த மாதிரியை பெரும் உத்தரவை வழங்கியுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115