யாழ்பாணம் வலிவடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூத்தியினை தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள தமது காணியை விடுவிக்க கோறி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. எதிர்வரும் திங்கற்கிழமை யாழ் அரசு அதிபர் அலுவலகம் முன்றலில் குறித்த போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளிக்கொள்ளபட்டுள்ள மயிலட்டி மீள் குடியேற்ற அபூர்த்தி கொளும் கடந்த 15/06/1990களில் எமது ஊரிலிருந்து நாம் விரட்டப்பட்டு 36 வருடங்கள் கழிந்துவிட்டன. 15/06/2026ல் இது நிறைவடைந்து 37வது வருடத்தில் கால் பதிக்கின்றோம். 2009 யுத்தம் நிறைவெற்று 17 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் நாம் குறிப்பாக ஜே 248 ஒன்றின் கீழ் 255 முழுமையாகவும் ஜே 251ஜே 246ல் மூன்றில் இரண்டு பங்கு பகுதி அளவிலும் விடுவிக்கப்படவில்லை. அதனால் பல போராட்டங்கள் சந்திப்புகள் நடத்தியும் நமக்கு பலன் கிடைக்கவில்லை. தற்போதும் அகதியாகவே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். 24/4/2026 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அறவழியில் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இந்நிலையில் நாம் எதிர்வரும் 15/6/26 ஆம் தேதி மாபெரும் மரவறி போராட்டம் ஒன்றை யாழ் அரசாங்க அதிபர் முன்னிலையில் போராட உத்தேசித்துள்ளோம். உங்களால் முடிந்த உதவியை செய்து இந்த போராட்டத்திற்கு பலன் சேர்க்குமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.