×

வடக்கு மாகாண சபைக்கு பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேச துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னெடுக்க மாட்டார் என்று நம்புகிறோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருது தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் தேர்தலை நடத்தி வடக்கு மாகாண சபைக்கு பொலீஸ் காணி அதிகாரங்களை வழங்கினால் தான் பிரச்சனை ஏற்படும். இலங்கையில் இதுவரை ஆட்சி புரிந்த எந்த ஒரு ஜனாதிபதியும் இந்த வேலையை போலீஸ் காணி அதிகார பகர்வு செய்யவில்லை. தற்போதைய ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயக்கவும் இதே அணுகு முறையை பின்பற்றுவார் என்று நம்புகிறோம். சில வேளை பொலீஸ்காணி அதிகாரங்களை வழங்கினால் இந்த நாடு பெட்றோல் ராட்சியமாகும். அவ்வாறு நடந்தால் இதுவரை காலமும் பாதுகாத்து வந்த ஒற்றையாட்சி முறைமை இல்லாமல் போகும். இது தேச துரோக நடவடிக்கையாகவே அமையும் என்று அவர் கூறினார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115