துபாய் மீது ஈரான்
நடத்திய தொடர் ஏவுகணை தாக்குதல்களால் ஏற்பட்ட சொத்து சேதங்களை படம்பிடித்து அக்காட்சிகளை பிற தரப்பினரோடு பகிர்ந்த குற்றச்சாட்டின் பெயரில் துபாய்
பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட ஒன்பது இளைஞர்கள் வரும் நாட்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளனர் என்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சட்ட நடவடிக்கை எதிர்கொள்ளும் இளைஞர்கள் வேலைக்காக துபாய் சென்ற தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. அரசின்
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த காணொளிகளை பதிவு செய்து வெளியிட்ட அதே குற்றத்திற்காக நாட்டின் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் 26 இளைஞர்கள் இரண்டு முறை நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்