×

யாழ்பணம் செம்மணி மனித புதைகுளியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனித

புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 18வது நாள் அகழ் பாராட்சி நேற்று முன்னெடுக்கப்பட்டது. நேற்றய அகழ்வுகளின் போது மேலும் பல மனித இச்சங்கள்

கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த மனித எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பெயரில் தடவியல் நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் வல்லுனர்களின் முன்னிலையில் இடம்பெற்ற இந்த அகழ்வு பணியின் போது புதிதாக ஆறு மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டு அவை தூய்மைப்படுத்தப்பட்டு குறியீட்டு இலக்கங்கள் இடப்பட்டுள்ளன. அத்துடன் சிறுவர்களுடைய இரு எலும்பு கூடுகள் உட்பட மொத்தம் எட்டு எலும்பு கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனித புதைகுழியின் முதலாவது மற்றும் இரண்டாவது தடவியல் அகழ்வு களங்களில் இதுவரை மொத்தம் 302 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 298 எலும்பு கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தடக்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன என்று பரிசோதனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115