பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக இனவாரியுடன் செயல்பட்ட நபருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பிபிசி செய்தி சேவையில் பணியாற்றிய நிகால் அர்த்தநாயக என்ற இளைஞரை தகாத வார்த்தைகளால் 60 வயதான கிரகம் குவார்ஸ் திட்டியுள்ளார். குறித்த நபர் நீதிமற்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் நீதிமன்றம் 400 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு கிரேட்டர் மென்ஸ்டாரில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் கிரகம் குவோஸ் மிகவும் மோசமாக செயல்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் போதையில் இருந்தமையால் தனது தனக்கு ஞாபகம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையுடன் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.