×

இன்றைக்கு யாழ்பாண சிறைச்சாலையிலே

எழுச்சி பாடல்கள் பாடினார் என்ற குற்றச்சாட்டிலே கைது செய்யப்பட்டு யாழ்பாண சிறைச்சாலையிலே விளக்கமறியில வைக்கப்பட்டிருக்கிற கணேஷ குமார் சங்கீர்த்தனை நாங்கள் சந்திக்க வந்திருக்கிறோம். அவருடைய தாயார் இங்கே இருக்கிறார்.

 நேற்றைய தினம் சவச்சேரி நீதவான் நீதிமன்றத்திலே அவர் உட்படுத்தப்பட்ட வேளையிலே ஸ்ரேஷ்ட சட்டதரணி திரு சாயந்தன் அவருக்காக ஆஜராகினது எனக்கு தெரியும். இந்த விடயம் சம்பந்தமாக மிக நீண்ட வாத பிரதிவாதங்கள் நீதிமன்றத்திலே நேற்றைக்கு இடம் பெற்றிருக்கிறது. அதிலே பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழே

இந்த வழக்கு பதிய பட்டிருக்கிற காரணத்தினாலே அவர் விளக்கமறியல் வைக்கும் படியாக உத்தரவு கொடுக்கப்பட்டிருது. திரு சாயந்தன் அவர்கள் இந்த வழக்கை நேற்றோடுமுடிவுறுத்தும் படியாக அதாவது அந்த அறிக்கையிலே சொல்லப்பட்ட விடயங்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்குள்ளேகொண்டுவரப்பட முடியாத விடயங்கள் என்று வாதாடி இருக்கிறார். ஆனாலும், நீதவான் அவர்கள்

முதல் நிலையிலே விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகிற காரணத்தினாலே விளக்கம் அறியலே வைக்க உத்தரவிட்டுருக்கிறார். தற்போது தாயாருடைய அறிவுறுத்தலின் படி நாங்கள் விளக்கமறியலில் இருக்கிற சங்கீர்த்தனை சந்தித்து உரையாடி இருக்கிறோம்.

அவர் சார்பிலே உடனடியாக ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று தாக்கல் செய்வதற்கு அவர் எங்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறார். அதற்கான

அவருடைய அறிவுறுத்தல்களை நாங்கள் பெற்றிருக்கிறோம். மிகவிரைவாக நாளைய தினமே அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அவருடைய அறிவுறுத்தலின் பெயரிலே உச்சநீதிமன்றத்திலே அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று தாக்கல் செய்து வெகுவிரைவிலே அவரை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ள போகிறோம். நேற்றைய தினம் நீதிமன்றத்திலே இந்த பாடல்

சம்பந்தமான முழு விவரமும் கூறப்பட்டிருக்கிறது. ஆகையினாலே இது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே கொண்டுவரப்படக்கூடிய ஒரு குற்றம் அல்ல. பயங்கரவாத தடுப்புச்சட்டத்திலே இரண்டாம் பிரிவின் கீழே இரண்டு ஒன்று எகின்ற பிரிவின் கீழே இனங்களுக்குிடையிலே குரோதத்தை ஏற்படுத்துகிற அல்ல ஏற்படுத்த சாத்தியமான நடவடிக்கையாகத்தான் இது சொல்லப்படுகிறது. அப்படியாக இது எந்த விதத்திலேயும் இனங்களுக்குிடையிலே குரோதத்தை ஏற்படுத்த முடியாது. அப்படிஏற்படுத்தப்படுகிறதாக வேணுமென்றே படம் காட்டுவதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள். ஆகையினாலே சட்டபார்வையிலே இது அப்படியான ஒரு குற்றம் அல்ல என்பதை நாங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சொல்லுவோம். ஏற்கனவே நீதவான் நீதிமன்றத்திலே சொல்லப்பட்ட விடயங்கள். ஆனால் விசாரணை முடியும் வரைக்கும் அது குறித்து நீதவான் நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலே உச்சநீதிமன்றத்திலே இது அடிப்படை உரிமை மீறல் என்கின்ற விடயத்தை சுட்டிக்காட்டி உடனடி நிவாரணம் பெறுவதற்காக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் அதற்கான முழு அதிகாரமும் விளக்கமறியலில் இருக்கிற சங்கீர்த்தனாலும் அவருடைய தாயாரி னாலும் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115