பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயக கலைஞர் சங்கீதனின்
விடுதலையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா என்ற கேள்வியையும் எழுப்பி கிளிநொச்சியில் மாபெரும் கவனையீர்ப்பு போராட்டம் ஒன்று உணர்வு பூர்வமாக நடைபெற்றது. கிளிநோச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இந்த போராட்டமானது இடம்பெற்றது. நாடலுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், மத
குருமார்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்து
கொண்டனர். இதன்போது அரசியல் பழிவாங்கல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள இளம் கலைஞர் சங்கீதனை நிபந்தனை என்றி விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்தில்
கலந்து கொண்டவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வாசகங்கள் அடங்கிய பதாதிகளை ஏந்தியவாரம் நீதிகோறி கோஷங்களை எழுப்பி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.