இந்திய விமானப் படையின் சாகசத்தை காக்பிட் எனப்படும் விமானி அறையிலிருந்து இந்திய விமானப்படை ஒளிபரப்பிய காணொளி வைரலாகி வருகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்புப் படை வீரர்களின் சாகச நிகழ்வு நடைபெற்றது.
இதில், விமானப் படை நடத்திய சாகச நிகழ்வு முதன் முறையாக விமானி அறையிலிருந்து பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
ரபேல், மிக்-29 உள்ளிட்ட விமானங்களின் விமானி காக்பிட்டிலிருந்து எடுக்கப்பட்ட காணொலியை மத்திய பாதுகாப்புப் படை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி மெய் சிலிர்க்க வைத்துள்ளது.