இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில், 21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப் பின்னர் 21 ஆண்டுகள் கழித்து, தற்போது இந்திய பெண் அர்னாஸ் கவுர் சாந்து (21) (Harnaaz Sandhu) பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் எய்லாட் நகரில் நடந்த விழாவில் பல நாட்டு அழகிகள் பங்கேற்றனர்.
இதில் மிஸ் யுனிவர்ஸ்சாக தேர்வு செய்யப்பட்ட அர்னாஸ் கவுர் சாந்து (21) (Harnaaz Sandhu) பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். வெற்றி பெற்ற அர்னாஸ் கவுர் சாந்துக்கு மெக்ஸிகோவை சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஆண்ட்ரியாமெசா கிரீடத்தை சூட்டினார்.


