உலக நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துவரும் நிலையில், பண்டிகை நாட்களில் கூட்டம் சேர்வது இன்னும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
தற்போதைய சூழலில் பண்டிகைகள் அனைத்தும் தள்ளிவைப்பதும் அல்லது ரத்து செய்வதுமே உரிய முடிவாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom தெரிவித்துள்ளார்.
சிக்கலான முடிவுகள் முன்னெடுப்பதால் வைரஸ் பரவலில் இருந்து நம்மையும் நமது உற்றார்களையும் அது பாதுகாக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு திட்டமிடுபவர்கள் கட்டாயம் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றால் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம், நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக நேரம் செலவிட அதிகம் விரும்புகிறோம், கொரோனா தொற்றுக்கு முந்தைய சாதாரண நிலைக்கு உலகம் திரும்ப வேண்டும் என விரும்புகிறோம்,
ஆனால் இவை அனைத்திற்கும் நாம் எடுக்கும் முடிவுகள் முக்கியமாகப்படுகிறது என்றார். இப்போதே நமது கொண்டாட்டங்களை ரத்து செய்வது அல்லது தள்ளிப்போடுவது என்பது உண்மையில் தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்த பேருதவியாக இருக்கும் என்றார்.
இல்லையெனில், கண்மூடித்தனமான விடுமுறை கொண்டாட்டங்கள் நமது உயிருக்கு உலைவைக்கும் என்பது உறுதியான ஒன்று என Tedros Adhanom எச்சரிக்கை விடுத்துள்ளார்.