Category: news

துருக்கிக்கு விரையும்  300 இராணுவ வீரர்கள்!!

துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த…

நாளை வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 8.00 மணி வரையில் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகச் செயலாளர்…

துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

துருக்கியில் உள்ள இலங்கையர்களைப் பற்றி விசாரிப்பதற்கு அல்லது தகவல்களை வழங்குவதற்கு துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. அதற்கமைய, கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகவல்களை வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ☎️தொ.இல: 00903124271032 / 00905344569498

குறுந்தகவலால் முண்டியடித்த முல்லைத்தீவு மக்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்குட்பட்ட மக்களுக்கு தொலைபேசி மூலம்குறுந்தகவல் அனுப்பப்பட்டதனால்,   உணவுப்  பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களைப் பெற்றுச்சென்றுள்ளனர். நேற்றைய தினம் (06.02.2023) உலக உணவுத்திட்ட அதிகாரிகள் குறுந்தகவல் ஊடாக அனுப்பிய தகவலுக்கமையவே இவ்வாறு நீண்ட வரிசையில் நின்று…

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 950 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்திடம் எரிவாயு இருப்பு இருப்பதால் முன்பு வெளியிடப்பட்ட விலையில் மட்டுமே விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் முதித…

துருக்கி விரையும் இலங்கை மீட்புப்படை!!

துருக்கியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.…

துருக்கியில் மற்றுமொரு பாரிய நிலநடுக்கம்!!

துருக்கியில் மற்றொரு பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. முதலாவதாக பதிவான 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவில் பாரிய…

தேசிய அடையாள அட்டையில் புதிய நடைமுறை!!

தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளினால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் வசூலிக்கும்…

திருத்தப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவு!!

எதிர்வரும் 22ம் திகதி விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை பத்திரம்…

SCSDO's eHEALTH

Let's Heal