Category: news

இந்தியாவில் தொற்று பரவல் குறித்து WHO கூறிய கருத்து!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது. இதற்கு பி-1-617 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வேகமாக பரவுவதற்கு இந்த உருமாற்ற கொரோனாதான் காரணமாக இருக்கலாம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.…

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிற்கு கொரோனா!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘ கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

இந்தியாவுக்கு உதவ தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியம், கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடியில் தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவ தயாராகிவருவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய…

24 கொரோனா நோயாளிகள் ஒக்சிஜன் கசிவு காரணமாக உயிரிழப்பு!

மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒக்சிஜன் கசிவு ஏற்பட்டதன் காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். வேறு மருத்துவமனைகளில் இருந்து ஒக்சிஜன் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் அதற்கு முன்பதாகவே 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக அம்மாநிலத்தின் மாவட்ட…

இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு!

எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து இரவு 10 மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்புவரை தொடரும் எனவும் இதன்போது, தனியார் பொதுப்போக்குவரத்துகளுக்கு அனுமதி இல்லையெனவும் மருத்துவம் போன்ற அவசர…

பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து!!

காட்பாடியை அடுத்த லத்தேரியில் பேருந்து நிலையம் அருகே மோகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு விற்பனை மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின்போது மோகனின் பேரன்கள் தனுஷ், தேஜஸ் ஆகியோர் உள்ளே இருந்ததால் அவர்களை வெளியே அழைத்து வர…

நடிகர் விவேக்கின் மறைவுக்கு கோலிவுட் பிரபலங்கள் இரங்கல்!!

இன்று அதிகாலை திடீரென, நடிகர் விவேக் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன விவேக்கின் மறைவு திரையுலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ள நிலையில் அவரது மறைவை அடுத்து கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து பதிவு செய்து…

நடிகர் விவேக்கின் மாரடைப்பிற்கு தடுப்பூசி காரணமா!!

மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், தடுப்பூசியால் அவருக்கு மாரடைந்து ஏற்படவில்லை என…

”மூப்பில்லா தமிழே தாயே” – ஏ.ஆர்.ரகுமானின் பாடல் குறித்த அறிவிப்பு!

ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்லா தமிழே தாயே என்கிற பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கவிஞர் தாமரை, ‘ தமிழர்கள் சோர்ந்திருக்கும் இவ்வேளையில் உலகத் தமிழர்களை இணைக்கும், உற்சாகமூட்டும் வண்ணம் ஒரு சிறப்பான தமிழுக்கான பாடல்…

இந்தியாவின் கொரோனா நிலைமை!

நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் இந்தியாவில் ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 569 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 40 இலட்சத்து 70 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 24…

SCSDO's eHEALTH

Let's Heal