×

ஜோர்டானில் உள்ள அஸ்ராக் (Azraq) இராணுவத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர் விமானங்கள், இராணுவத் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது. எனினும், தங்களை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஈரானிய ஏவுகணைகளைத் தங்கள் நாட்டு இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஜோர்டான் தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, குவைத்தின் பல பகுதிகளில் அமெரிக்கப் படைகளும் இஸ்ரேல் ஆதரவுப் போராளிகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்களை இலக்கு வைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. அங்குள்ள அதிவேக பீரங்கி ரொக்கெட் அமைப்புகள் (HIMARS) மற்றும் ஏவுகணைகளைத் தாம் அழித்துள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் மூலம் பெருமளவிலான ஈரானுக்கு எதிரானவர்களும் அமெரிக்கச் சிறப்புப் படைகளும் அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள புரட்சிகரப் பாதுகாப்புப் படை, இந்த நேருக்கு நேர் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115