வெளிநாட்டு பணக்கார பெண்ணை காதலித்த இந்திய இளைஞர் தனது காதலில் உறுதியாக இருந்து அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்தவர் அவினாஷ் டோஹர். இவருக்கு மொரோக்கோ நாட்டை சேர்ந்த பட்வா என்ற இளம்பெண்ணுடன் சமூகவலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
இதையடுத்து அவினாஷ் இருமுறை மொரோக்கோவுக்கு சென்று பட்வா மற்றும் அவர் குடும்பத்தாரை சந்தித்து திருமணம் குறித்து பேசினார்.
ஆனால் இந்த திருமணத்துக்கு முதலில் சம்மதிக்காத பட்வாவின் தந்தை பின்னர் ஒரு நிபந்தனை விதித்தார். அதன்படி, என் மகளை நீ மணக்க வேண்டும் என்றால் மொரோக்கோவுக்கு நிரந்திரமாக வந்துவிட வேண்டும் என்றார்.

ஆனால் அவினாஷோ, என்னால் அங்கு வரமுடியாது, நான் என் ஊரில் தான் வாழ்வேன் மற்றும் மதமும் மாற முடியாது என்பதை உறுதியாக கூறினார். அதே போல பட்வாவையும் மதம் மாற வற்புறுத்த மாட்டேன் என்றார்.
ஒரு கட்டத்தில் அவினாஷ் – பட்வாவின் காதலின் உறுதித்தன்மையை உணர்ந்த பட்வா தந்தை திருமணத்துக்கு சம்மதித்தார். இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.