Omicron வைரசின் வீரியம் குறித்து உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron வைரஸ் உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. Omicron வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனாவே முடிவுக்கு வராத நிலையில் அடுத்தடுத்து உருமாறும் புதிய வைரஸை கண்டு உலக நாடுகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
புதிதாக பரவி வரும் Omicron வைரஸ் குறித்து பல ஆய்வு தரவுகள் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் உலக சுகாதாரத்துறை நிறுவனத்தின் முன்னணி அதிகாரி ஜேனட் டயஸ் கூறியதாவது, டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரானின் தீவிரத்தன்மை குறைவானதாக தோன்றினாலும் தடுப்பூசி போடப்பட்டவர்களையும் இது பாதித்துள்ளது.
இதனால் Omicron லேசானது அல்ல என்று வகைப்படுத்த முடியாது. கொரோனா, டெல்டா வைகை வைரஸ்கள் ஏற்படுத்திய மாறுபாடுகளை போலவே Omicron வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வருகின்றனர்.

அதுபோல சிகிச்சை பலன் கொடுக்காமல் உயிரிழந்தும் வருகின்றனர். தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு ஜூலை மாதத்திற்குள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் .
இதன் மூலம் தொற்றுநோயின் கடுமையான கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கு கடுமையான பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் தடுப்பூசி போடப்படாதவர்கள் என்று தெரிவித்துள்ளார்.