போலந்து நாட்டில் மாஸ்க் அணியாமல் கைதான நபரிடம் முன்னெடுத்த விசாரணையில், அவர் 20 ஆண்டுகளாக தேடப்படும் கொலை குற்றவாளி என தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வார்சா பொலிசார் வெளியிட்ட தகவலில், தலைநகரின் வடகிழக்கில் அமைந்துள்ள அங்காடி ஒன்றில் மாஸ்க் அணியாத குற்றத்திற்காக அவர் கைதானதாக குறிப்பிட்டுள்ளனர்.
45 வயதான அந்த நபர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கொலை வழக்கில் சிக்கி, தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னரும் பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.

தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், போலந்து முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே மாஸ்க் அணியாமல் குறித்த நபர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். விசாரணையில் அவர் கொலை குற்றவாளி என தெரிய வந்ததை அடுத்து, அவரை சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை வழக்கில் குறித்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.