தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், ரிஷப் பாண்ட் கேட்ச் பிடித்தது ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பார்கில் நேற்று முன் தினம் துவங்கியது.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 229 ஓட்டங்களும் எடுக்க, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ஓட்டங்கள் எடுத்து, 58 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த போது, அந்தணியின் முக்கிய வீரரான Rassie van der Dussen விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்டிடம் கேட்ச் ஆகி அவுட் ஆகினார்.

ஆனால், அது டிவி ரீப்ளேவில் பந்து கீழே பட்டு பிடித்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. நடுவரும் இதை சரியாக கவனிக்காமல் அவுட் கொடுத்ததால், தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எல்கர் இது குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.