அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திங்களன்று அமெரிக்காவில் 1 மில்லியன் மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என Bloomberg அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு நாட்களுக்கு முன் ஒரே நாளில் 5,90,000 தொற்றால் பாதிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
அதேசமயம், இதுவரை எந்த நாட்டிலும் ஒரே நாளில் 10 லட்சம் பாதிப்புகள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒமிக்ரான் பரவல் காரணமாக தொற்று பாதிப்பு இவ்வாறு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தொற்று பாதிப்பு போல் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சுகாதாரத்துறையின் சமீபத்திய தரவுகளின்படி, 1,03,000-க்கும் அதிகமான மக்கள் தற்போது கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.