இந்தியாவின் – உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கு போராட்டம் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் உத்தர பிரதேச மாநிலத்தின் கூடுதல் தலைமை செயலாளர் டொக்டர் தேவேஷ் குமார் சதுர்வேதி (Devesh Kumar Chaturvedi) நேற்றைய தினம் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்தவிதமான போராட்டங்களையும நடத்தக்கூடாது.
அதையும் மீறி போராட்டம் நடத்தினால் எஸ்மா சட்டம் (Esma Law) நடவடிக்கையினை மேற்கொள்ளும். இந்த உத்தரவை மீறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த மே மாதம் இதுபோன்று உத்தர பிரதேச அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு போராட்டம் நடத்த தடைவிதித்தது. அத்தியாவசிய சேவைக்கான துறைகளில் பணிபுரியம் அரசாங்க ஊழியர்கள் வேலைக்குச் செல்லாமல் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்மா சட்டம் (Esma Law) பயன்படும்.
ஊழியர்கள் விதிகளை மீறினால் எந்தவிதமான பிடியாணையும் இன்றி கைது செய்வதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக வழங்க முடியும்.
கடந்த ஆண்டு மே மாதம் எஸ்மா சட்டத்தை (Esma Law) கொண்டு வந்தது. நவம்பர் மாதத்தில் போராட்டத்திற்கான தடையை மீண்டும் ஆறு மாதத்திற்கு நீட்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.