கிளிநொச்சியில் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு (18-12-2021) இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் 32 வயதுடைய நிலகரட்ண ஜெயசீலி என்ற 03 பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான இவர் முன்பள்ளி ஆசிரியையாக சேவை புரிந்து வந்துள்ளார். கிளிநொச்சி விநாயகபுரம், இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர் தொழிலின் நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது மூத்த பிள்ளைகள் இரண்டும் தாயாருடன் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் வழமையாக தங்குவர். நேற்று இரவும் வழமைபோல இரண்டு பிள்ளைகளும் சென்றுள்ளனர். அதே வேளை கடைசி பிள்ளை தாயாருடன் வழமைபோல நின்றுள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. சடலத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மேலதிக விரிவான விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal