
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இரவு 8.00 மணிக்கு பதில் நிதி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடை பெறவுள்ளதாக அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போது அமெரிக்கா சென்றுள்ளதால் பதில் நிதி அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜனாதிபதி கோட்டாபயவினா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.