
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பஞ்சாப் மாநில அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில், 14 நாட்களுக்குள் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஞ்சாப் மாநில சட்டம் மற்றும் ஒழுங்குகள் தொடர்பான குழு, காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, அதனை நாளாந்தம் விசாரணைக்கு உட்படுத்த, பஞ்சாப் மாநில நீதியமைச்சர் முஹம்மட் பஷராட் ராஜா அறிவுறுத்தியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.