இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி சொதப்பி வருகிறது. தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐசிசி தொடர்களில் இதுவரை ஒரு கோப்பையை கூட வென்றுக்கொடுக்காத விராட் கோலி இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதனால் இந்த உலகக்கோப்பை அவருக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான தொடர் தோல்வி அவரது ஒருநாள் கேப்டன் பதவிக்கும் சேர்த்து ஆப்பு வைத்துள்ளது.
அவரை பதவியில் இருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 2 நாட்களில் பிசிசிஐ-ன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து முடிவெடுக்கவுள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.