இந்தியாவின் கேரளாவில் நேற்று இடம்பெற்ற சாலை விபத்தில் முன்னாள் கேரள அழகியும் அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்நிலையில் இது போக வேண்டிய நேரம்.. என இன்ஸ்டாவில் பதிவிட்ட சில மணி நேரங்களில் முன்னாள் கேரள அழகியும், தோழியும் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவணந்தபுரத்தை சேர்ந்த அன்சி கபீர். இவர் 2019-ம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்றவர். இவரது தோழி அஞ்சனா திருச்சூரை சேர்ந்தவர் 2019-ம் ஆண்டு மிஸ் கேரளா போட்டியில் 2-ம் இடம் பிடித்தவர்.

இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் இரண்டு ஆண் நண்பர்களுடன் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் தோழிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஆண் நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில்,
ஃபோட்டோஷூட் முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபந்து இடம்பெற்றதாக கூறப்ப்டுகின்றது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த இரு சக்கரவாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளனர்.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. அதில் தோழிகள் இருவரும் உயிரிழந்த நிலையில் ஆண் நண்பர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை ஓட்டி வந்த நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை சாலை விபத்தில் உயிரிழந்த தோழிகள் இருவரும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்கள். அன்சி கபீர் தனது இன்ஸ்டாபக்கத்தில் கடைசியாக போஸ்ட் செய்த வீடியோவில் இது போக வேண்டிய நேரம் எனப் பதிவிட்டு ஒரு அடர்ந்த வனத்தில் நடந்து செல்வது போன்ற வீடியோவை போஸ்ட் செய்துள்ளார்.
இந்நிலையில் அன்சி கபீருக்கு அவரது மரணம் குறித்து முன்பே தெரிந்துவிட்டதாக என இந்த விடியோவுக்கு கீழ் அவரது நண்பர்களும் , இன்ஸ்டாவில் அவரை பின் தொடர்பவர்களும் சோகமான பதிவுகளை பதிவு செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் உடல்நசுங்கி பலியான அழகிகள்!