தமிழகத்தில் 1330 திருக்குறளை மனப்பாடம் செய்து எந்த வரிசையில் கேட்டாலும் சரியாக கூறி அசத்தி வருகிறார் பேரரசி என்ற மாணவி.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக தாக்கி வருவதால் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பேரரசி என்ற மாணவி 8ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதே தாயின் உதவியால் 500 குறள் மற்றும் அதனின் விளக்கத்தையும் மனப்பாடம் செய்து தப்பில்லாமல் தெளிவாக கூறி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

அதன்பிறகு விளையாடும் பொழுது கூட ஆடியோ மூலம் திருக்குறளை கற்றுள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் கிடைத்த பொன்னான நேரத்தை சரியான வழியில் பயன்படுத்தி சுமார் 1330 குறள்களையும் மனப்பாடம் செய்துள்ளார் பேரரசி.
தற்பொழுது மாணவி எந்த வரிசையில் கேட்டாலும் சரியான திருக்குறளை கூறி அசத்தி வருகிறார்.