
இது குறித்து ஃபைசர் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்திடம் ஃபைசர் தடுப்பூசி தொடர்பில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இனிவரும் காலங்களில் 12 முதல் 15 வயதானோருக்கு ஃபைசர் தடுப்பூசி பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் அமெரிக்காவில் ஃபைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.