
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 09 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஏழாவது இடத்தில் நீடிக்கின்றது.
ஒரே நாளில் 02 ஆயிரத்து 685 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் காரணமாக அங்கு ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.