
அமெரிக்கா மனிதாபிமான நிவாரண தொகையாக 310 மில்லியன் டொலர்களை மத்திய அமெரிக்காவிற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
குவாத்தமாலா ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டேவுடனான இணைய வழி சந்திப்பின் போது, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இதனை உறுதிப்படுத்தினார்.
மெக்ஸிகோ முழுவதும் குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடாரில் இருந்து அமெரிக்க எல்லைக்கு குடியேறியவர்களின் வருகைக்கு தீர்வு காண ஜனாதிபதி ஜோ பைடனின் முயற்சிகளை முன்னெடுக்கும் ஹாரிஸ், நேற்று (திங்கட்கிழமை) பேச்சுவார்தையொன்றை முன்னெடுத்தார்.
இதன்போது,’பிராந்தியத்திற்கு நிவாரணம் அதிகரிக்கவும், குடியேற்றத்தை பயனுள்ள, பாதுகாப்பான மற்றும் மனிதாபிமானத்துடன் நிர்வகிப்பதற்கான எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது’ என்று ஹாரிஸ் கியாமட்டேவுக்கு உறுதியளித்தார்.
இதனிடையே அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், எதிர்வரும் ஜூன் மாதம் மத்திய அமெரிக்காவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.