
அடுத்த வாரம் வியன்னாவில் நடைபெறும் கூட்டத்தில் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சில் பங்கேற்பதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானுடன் நேரடியாக உட்கார்ந்து பேசுவது வெளிப்படையாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கூட்டு விரிவான திட்டம் என முறையாக அறியப்படும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் நேரடிச் சந்திப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கடினமான விவாதங்கள் இருக்கும் எனவும், இதனால் உடனடி முன்னேற்றத்தை தாம் எதிர்பார்க்கவில்லை என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுவொரு ஆரோக்கியமான முன்னேற்றம் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.