
மில்ட்றி டிரக்ட் (Military Direct) வெளியிட்ட அறிக்கையில் பலமான ராணுவத்தைக் கொண்ட நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் உலகில் பலமான ராணுவத்தைக் கொண்ட நாடாகச் சீனா முதல் இடத்தில் உள்ளது. அதில் ராணுவத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கும் அமெரிக்கா 74 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ரஷ்யா 69 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா 61 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கின்றன. பிரான்ஸ் 58 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
100-க்கு 82 புள்ளிகளுடன் உலகின் வலிமையான ராணுவமாக சீனா முதலிடத்தில் இருக்கிறது. ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, தரை, கப்பல் மற்றும் விமான படைபலம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு 732 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுடன் அதிக நிதி பெரும் ராணுவமாக அமெரிக்க ராணுவம் முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 261 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி பெரும் ராணுவமாகச் சீனா இரண்டாவது இடத்தையும், 71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுடன் இந்திய ராணுவம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
`அந்த விபத்து பத்தி பேச வேண்டாமே; இப்போ ஒன்லி பாசிட்டிவிட்டிதான்!" -
குக் வித் கோமாளி’ பவித்ரா
மேலும் கப்பற்படையில் சீனாவும், விமானப்படையில் அமெரிக்காவும், தரைப்படையில் ரஷ்யாவும் முன்னணியில் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின்படி, 406 கப்பல்களுடன் சீனா கப்பற்படையில் முன்னணியில் இருக்கிறது. ரஷ்யா 278 கப்பல்கள், அமெரிக்க மற்றும் இந்தியா 202 கப்பல்களுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
14,141 போர்விமானங்களுடன் அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது, 4682 போர்விமானங்களுடன் ரஷ்யாவும், 3587 போர்விமானங்களுடன் சீனாவும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
அதே போலத் தரைப்படையில் 54,866 வாகனங்களுடன் ரஷ்யா முன்னிலை வகிக்கிறது. 50,326 வாகனங்களுடன் அமெரிக்காவும், 41,641 வாகனங்களுடன் சீனாவும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.