
மத்திய கிழக்குக்கான பயணத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங், ஈரானிற்குச் சென்றுள்ளார். இந்த விஜயத்தில் அவர், ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி, உயர் தலைவர் அலி ஹொசைனி கமேனியின் பிரதிநிதி அலி லரிஜானி ஆகியோர் உட்பட உயரதிகாரிகளைச் சந்தித்தார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரானும் சீனாவும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று கையெழுத்தாகியுள்ளதுடன் அதில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.