Month: December 2021

தண்டப்பணம் அறவிடும் முறைகளில் வருகிறது மாற்றம்!

வாகனங்கள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் தண்டப்பணம் அறவிடும் செயற்பாடுகளை தொழில்நுட்பமயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அநேகமான சந்தர்ப்பங்களில் தண்டப்பணம் செலுத்தி தனது வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள இரண்டு அல்லது மூன்று நாட்கள் செல்வதாக அவர்…

யாழில் கரையொதுங்கிய சடலங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா?

யாழ்ப்பாண கரைகளில் ஒதுங்கிய சடங்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களா என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த சந்தேகத்தை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாண குடாநாட்டு கரையோரங்களில் 6…

பிபின் ராவத் – அவரது மனைவியின் உடல்களுக்கு அரசியல் பிரபலங்கள் அஞ்சலி

தமிழகத்தில் கூனூரில் இடம்பெற்ற உலங்குவனூர்தி விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்இந்தியாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் ஒரு பிரிகேடியர்…

சர்வதேச மனிதஉரிமைகள் தினம்!!

இன்று சர்வதேச மனிதஉரிமைகள் தினமாகும். சகல மனிதர்களும் தமக்கான உரிமைகளோடும் கௌரவத்தோடும் வாழ்வதையே மனித உரிமைகள் தினம் வலியுறுத்துகின்றது. உணவு உடை உறையுள் என்பவற்றோடு மனித உரிமைகளில் நல்வாழ்க்கைக்கும் விடுதலைக்குமான உரிமை, பேச்சுத் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம்…

மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலைகள்

சந்தையில் மீண்டும் சில மரக்கறிகளின் விலைகள் உயர்வாகவே காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் உயர்வாகவே காணப்படுவதாக விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதார நிலையங்களில் நேற்று ஒரு கிலோகிராம்…

மீண்டும் பால்மா தட்டுப்பாடு தீவிரமடையலாம்!

நாட்டுக்கு பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலரை நிதியமைச்சு பெற்று தராவிடின் எதிர்வரும் நாட்களில் பால்மா தட்டுப்பாடு தீவிரமடையும் என பால்மா இறக்குமதியாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக…

இலங்கைக்கு மற்றுமொரு ஆபத்து! உயிரிழப்பும் பதிவானது

  இலங்கையின் – இரத்தினப்புரி மாவட்டத்தில் விவசாயம் உள்ளிட்ட நிலத்துடன் தொடர்புடைய தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட பலரும் எலிக்காய்ச்சல் அச்சத்திலேயே தமது அன்றாட கடமைகளில் ஈடுபடுகின்றனர். 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களையும், ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பாதிப்பினையும் கொவிட்-19 இலங்கையில்…

மைத்திரி தொடர்பில் அமைச்சர் பிரசன்ன கூறியமை பற்றி விசாரிக்க வேண்டும்:கத்தோலிக்க மத குருமார்

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தமை சம்பந்தமாக உடனடியாக விசாரணையை நடத்துமாறு கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயத்தின் மத குருமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

புலம்பெயர்ந்து சென்றோரை பலியெடுத்த கோர விபத்து! குழந்தைகள், பெண்கள் உட்பட 53 பேர் பரிதாபமாக உயிரிழப்பு (காணொளி)

மத்திய அமெரிக்கா – மெக்சிகோ நெடுஞ்சாலையில் சியாபாஸ் மாநில தலைநகரை நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக சியாபாஸ் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.…

கடற்படைக்கு சொந்தமான பேருந்துடன் வான் ஒன்று மோதி விபத்து! இருவர் பலி

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் வான் ஒன்று பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  இருவர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை நொச்சியாகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில்…

SCSDO's eHEALTH

Let's Heal