புழுதி – பாகம் 3!!
பனங்காயை பிளிந்து பாணி எடுத்து பனந்தடுக்கில காயவைச்சு சின்ன சின்ன துண்டுகளா வெட்டி உறைப்பு கலந்த பனங்கருப்பணிபாணியில போட்டு அம்மா செய்யிற பாணிப்பனாட்டின்ர சுவையே தனிதான். நான் பாணிப்பனாட்டு கொண்டு போனா காணும்……. அடிபட்டு பறிச்சுப்போடுவாங்கள். ஆளுக்கொரு போத்தலில தண்ணியும் எடுத்துக்கொண்டு…