
தமிழகத்தின் குன்னூரில் நேற்றையதினம் இடம்பெற்ற உலங்கூர்தி விபத்தில் இந்திய முப்படைத்தளபதி பிபின் ராவத் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை வீரர் ஒருவர் இதகவலை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட உடனயே பிபின் ராவத் தனது பெயரை கூறியதாகவும் அந்த தீயணைப்பு துறை வீரர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை முப்படைதளபதி ராவத் உடன் க்ரூப் கேப்டன் வருண் சிங் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அந்த வீரர் கூறியுள்ளார்.
இந்நிலையில் க்ரூப் கேப்டன் வருண் சிங் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த விபத்தில் முப்படைத்தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.