லண்டனில் ஆம்புலன்சில் ஒருவரின் உயிரை காப்பாற்ற சென்று கொண்டிருந்த 21 வயதான பெண் மருத்துவ ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலிஸ் கிளார்க் என்ற 21 வயது இளம்பெண் மருத்துவ ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த புதன்கிழமை ஒரு சம்பவம் தொடர்பில் வந்த அவசர அழைப்பின் பேரில் ஆம்புலன்சில் கிளார்க் உள்ளிட்ட மூவர் சென்றுள்ளார். அப்போது ஆம்புலன்ஸும், சிமெண்ட் லொறியும் மோதி கொண்ட விபத்தில் கிளார்க் உயிரிழந்தார்.
மற்ற இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த சமயத்தில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இல்லை. இந்த நிலையில் உயிரிழந்த கிளார்க் குறித்து அவர் பெற்றோர் கூறுகையில், ஒரு மருத்துவ ஊழியராக, துணை மருத்துவராக தகுதி பெற்றதில் கிளார்க் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார்.

அவள் ஒரு அழகான, கனிவான பெண்ணாக இருந்தாள். இந்த சோகமான தருணத்தில் நாங்கள் தனிப்பட்ட பிரைவசியை எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய லொறி ஓட்டுனருக்கும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.