
யாழில் குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவத்தில் உரும்பிராய் தெற்கு, செல்வபுரம் பகுதியை சேர்ந்த தீனுஷ் ரொசாந்தி (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த யுவதி நேற்று மாலை 4 மணியளவில் தனது வீட்டிற்குள் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.