அம்பாறை ,தீகவாபி பள்ளக்காடு கிராமத்தில் உள்ள குப்பை மேட்டிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட மேலும் இரண்டு யானைகள் கடந்த வார இறுதியில் உயிரிழந்துள்ளதாக மாவட்ட வனவிலங்கு கால்நடை மருத்துவர் டொக்டர் நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளில் 20 யானைகள் குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்களை சாப்பிட்டு இறந்துள்ளன.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் திறந்தவெளி குப்பை கிடங்கில் பிளாஸ்டிக், பொலிதீன் கழிவுகள் தேங்குவதாலும் அங்கு ப்பகுதியில் அதிகளவில் யானைகள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறந்த யானைகளை பரிசோதித்த போது,குப்பை மேட்டில் இருந்து பெருமளவிலான அழியாத பிளாஸ்டிக் பொருட்களை உண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் யானைகள் சாப்பிட்டு ஜீரணிக்கும் சாதாரண உணவு எதுவும் அங்கு தெளிவாகத் தெரியவில்லை எனவும் வனவிலங்கு கால்நடை மருத்துவர் டொக்டர் நிஹால் புஷ்ப குமார மேலும் தெரிவித்தார்.
