
உலக சுகாதார நிறுவனம் , சீன அரசாங்கத்தின் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அத்துடன், தொற்று நோய் ஒன்றுக்கான சீனத் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகாலப் பயன்பாட்டு ஒப்புதல் அளித்தது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்கத்தேய நாடுகளுக்கு வெளியே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு முதல் அங்கீகாரம் சீனத் தடுப்பூசிக்குக் கிடைத்துள்ளது.