கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியிலுள்ள வீடொன்றில் மனிதனைப் போன்ற சிலந்தி ஒன்றை வீட்டு உரிமையாளர்கள் கண்டுள்ளனர்.
சிலந்தியை வீட்டின் உரிமையாளர்கள் வித்தியாசமாக வீட்டின் சுவரில் பார்த்தபோது, அது மனித முகம் போல் காட்சியளித்தது. இந்த தகவலை வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிது நேரமே காட்சியளித்த அபூர்வ சிலந்தி அந்த இடத்தை விட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
