எழுதியவர் – முனைவர் ஆ.பூபாலன்


தமிழ் மண்ணோடும், பண்பாட்டோடும் மிக நெருங்கிய நீண்ட காலத் தொடர்புடையது கேழ்வரகு!
கேப்பைக் களி கிண்டாத சமையலறையோ,
கேப்பைக் கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழாக்களோ
நம் பாரம்பரியத்தில் இருந்ததில்லை.
தமிழகம் முழுவதும் விளைச்சலில் முக்கியமானது கேழ்வரகு, நம் தாத்தாக்கள் , நம் அப்பாக்கள் கேழ்வரகு பயிர் செய்தார்கள் நாம் கண்டோம், கேள்விப்பட்டோம்! ஆனால் நம் அடுத்த சந்ததியோ தம் வரலாற்று புத்தகங்களில் படித்துக் கொண்டு படங்களை மட்டுமே பார்க்கக்கூடும்..
அவையா அரிசி அம் களி துழவை – பெரும். 275
துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு – புறம் 328/11
சோறு குழைந்துபோனால் “என்ன இன்னிக்குக் களியா” என்று கேலிபேசுவோம். ஆனால் சில வீடுகளில் சோற்றையே குழையவைத்து,
துடுப்புகொண்டு துழாவி களிப்பதத்தில் செய்திருக்கிறார்கள்.