கேரளாவில் மனைவிகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது குறித்து அதிர்ச்சி தகவல் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் மனைவிகளை, தங்களுடைய நண்பர்களின் ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தப்பட்டு வருவதாக, பொலிசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.
ஆனால், இதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், கோட்டயம் அருகே கருகச்சால் பகுதியை சேர்ந்த 26 மதிக்கத்தக்க பெண் ஒருவர் அளித்த புகாரில், இதைப் பற்றி பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின.
கேரளா முழுவதும் 24 வாட்ஸ் அப் குழுக்கள் அமைக்கப்பட்டு, இது போன்ற சம்பவம் நடந்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் கணவர் உட்பட 6 பேரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய நண்பரின் வீட்டில் ஒரு குடும்ப விழா நடைபெறுகிறது என்று கூறி முதலில் மனைவியை அவர் அழைத்து சென்று உள்ளார்.
அதன் பின், வீட்டுக்கு வந்த பிறகு தான் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றது எதற்காக என்பது குறித்து மனைவியிடம் அவர் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண் பின்னர் செல்ல மறுத்துள்ளார். குழந்தைகளை கொன்று விடுவேன் என்று மிரட்டி அவர் தன்னுடைய மனைவியை பணிய வைத்து உள்ளார்.
அதன் பிறகு தனது மனைவி வேறு ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதை கணவரே ரகசியமாக வீடியோ எடுத்து உள்ளார். தொடர்ந்து வீடியோவை காண்பித்து மிரட்டி கடந்த 2 வருடமாக மனைவியை பலருக்கும் விருந்தாக்கி வந்துள்ளார். நாளுக்கு நாள் கணவனின் கொடுமை அதிகமானதால் தான் வேறு வழியின்றி இளம்பெண் பொலிசில் புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.