கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எமக்கு உண்டு என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றது. இதன்போது அவர்களை வாழ்த்தி கருத்துரைத்த அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைக்க ஆதரவுக் கரம் நீட்டிய தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எமக்கு உண்டு. ஆனால் அதில் கர்வமோ, ஆணவமோ இருக்காது. ஜனநாயகமும், மரபுகளும் நிச்சயமாக அதில் இருக்கும்.
எந்த காரணத்தைக் கொண்டும் ஆணவம் இருக்காது. கர்வம் இருக்காது. ஜனநாயகம்தான் இருக்கும். மரபுகளும் கடைப்பிடிக்கப்படும். தோல்வியில் துவள்வதும், வெற்றியில் இறுமாப்பு கொள்வதும் எங்களுடைய வழக்கம் அல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.