அமெரிக்காவில் பெண் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது குழந்தை பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Philadelphia பகுதியில் வசித்து வருபவர் Yiran Sherry (33). இவரின் கணவர் Keating Sherry (34) இந்நிலையில் கர்ப்பிணியான Yiran Sherry மற்றும் அவரது கணவர் இருவரும் Tesla காரில் பயணம் செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் Keating Sherryக்கு எதிர்பாராதவிதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது சாலை நெரிசலில் சிக்கிய இருவரும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் திண்டாடியுள்ளனர். இதையடுத்து Keating Sherry காரை ஆட்டோ பைலட் மோடுக்கு மாற்றியதோடு காரை மருத்துவமனைக்கு செல்ல உத்தரவிட்டுள்ளார்.

அதன்பிறகு அவர் பிரசவ வலியால் துடித்த தன் மனைவிக்கு உதவி செய்ய தொடங்கினார். அவர் தனது மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு வயிற்றை அழுத்த தொடங்கினார். 20 நிமிடத்திற்கு பிறகு மருத்துவமனையில் கார் நுழையும் போது Yiran Sherryக்கு குழந்தை பிறந்தது.

அப்போது மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள் புதிதாக பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியுள்ளனர். டெஸ்லா காரில் பிறந்த குழந்தையை மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள் `டெஸ்லா பேபி’ என்று அழைக்க தொடங்கினர்.

இதையடுத்து இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. டெஸ்லா காரில் பிறந்ததால், தங்கள் குழந்தைக்கு `டெஸ்’ என்று பெயர் சூட்டலாம் என Sherry தம்பதியினர் ஆலோசித்து வருகின்றனர்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal