Tag: Srilanka

“கோட்டா கோ ஹோம்” மக்கள் எழுச்சி!!

கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்று 13வது நாளாகவும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

சடுதியாக உயர்ந்தது இலங்கையின் பணவீக்கம்!!

ரூபாயின் பணமதிப்பிழப்பு காரணமாக இலங்கையில் பணவீக்கம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, நிதி நெருக்கடியில் உள்ள நாடுகளின் பொருளாதார காரணிகளைக்…

இலங்கையில் மருந்து தட்டுப்பாடு – சுகாதார அமைச்சர்!

சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண சர்வதேச நிறுவனங்களின் நிதியைப் பயன்படுத்தி மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், அவற்றினை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டால், 80 நாட்களுக்கு மருந்து தட்டுப்பாடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.…

போராட்ட களத்திற்குச் செல்லும் விருது பெற்ற நடிகர்!!

நாடகம், ஒபார நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்து பிரித்தானியாவின் ஒலிவியர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற இலங்கையரான இளம் நடிகர் ஹிரான் அபேசேகர இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹிரான் அபேசேகர இன்றிரவு…

இலங்கையின் இன்றைய டொலர் பெறுமதி!!

இன்றைய டொலரின் விற்பனைப் பெறுமதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலையானது 340 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலையானது 330 ரூபாவாக பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் எட்டாவது நாளாக போராட்டம்!!

காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஏப்ரல் 18 ஆம்…

சனத் ஜயசூரியவும் போராட்டத்தில் இணைந்தார்!!

அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் காலிமுகத்திடலில் தொடர்ந்து ஏழாவது நாளாக இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜயசூரியவும் அதில் கலந்துகொண்டுள்ளார். தொடர்ந்தும் இந்த போராட்டத்திற்கு நாட்டின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழகம் செல்ல முயன்ற ஐவர் கைது!!

இந்தியா செல்ல முயன்ற ஐவர் யாழில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை (15) இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற சமயமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணைப்…

கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய 355 பேருக்கு நியமனம்!!

கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களில் 355 பேர் மாகாண கல்வி அமைச்சிற்குட்பட்ட பாடசாலைகளிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , ஆண்டுதோறும் கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரிய மாணவர்கள் ஆசிரியர்களாக…

SCSDO's eHEALTH

Let's Heal