Month: April 2022

எலான் மஸ்க் உக்ரைனுக்கு செய்த உதவி!!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ரஷ்யா படையெடுப்பை எதிர்த்து போராடி வரும் உக்ரைனுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ரஷ்யாவின் சரமாரி தாக்குதல்களால் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ள உக்ரைன், குறிப்பாக, சுகாதார மையங்களில் தடையின்றிய மின்சாரம் விநியோகிக்க போராடி வருகிறது. இந்நிலையில்,…

ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டுவெடிப்பு!!

நேற்றைய தினம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில், குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் 66 பேர் பலியாகியுள்ளனர் எனவும் 78 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தலிபான்களின்…

தென்னிலங்கை மருத்துவரின் உருக்கமான பதிவு

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அன்றாடம் வாங்கும் உணவு பொருட்களில் இருந்து மருந்து பொருட்களை வரை பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்களும் அன்றாடம் வேலைக்கு செல்லும்…

நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடித்து பாரிய விபத்து!!

இமோ மாநிலத்தில் உள்ள ஓஹாஜி-எக்பேமா உள்ளூர் அரசாங்கப் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தினால், நாடு அதிர்ச்சியில்…

இலங்கைக்கு அவசர உதவி வழங்குகிறது இத்தாலி!!

இத்தாலி அரசாங்கம் 125 மில்லியன் ரூபாயினை இலங்கைக்கு அவசர உதவியாக வழங்க முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளது.

ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ்மா அதிபர் விளக்கம்!!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளின்போது பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லையென காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட சில சிரேஷ்ட அதிகாரிகள் இன்று முற்பகல்…

மேலும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!

மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். மழையில் நனைந்தபடி கடலில் உயிருக்கு ஆபத்தான முறையில் வந்தவர்களை கடலோர காவல் அதினாரிகள் மீட்டு காவல் நிலையத்திலேயே தங்கதுள்ளனர். மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த…

கோப் குழுவால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசாரணைக்கு அழைப்பு!!

கோப் குழுவால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அழைக்கப்பட்டிருப்பதாக கோப் குழு தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி…

இந்தியாவுக்குப் பயணமாகிறார் பொரிஸ் ஜோன்ஸன்!!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன்,அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து, இன்று காலை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வரவேற்றுள்ளார். குஜராத்தில் ஒரு நாள் தங்கியிருக்கும் பிரித்தானிய பிரதமர், அந்த மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய வணிகத் தலைவர்களைச்…

“கோட்டா கோ ஹோம்” மக்கள் எழுச்சி!!

கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்று 13வது நாளாகவும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.