Description
எளிய தமிழில் MySQL
MySQL பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருள்
( Free Open Source Software ) வகையிலான Database System.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.
இதில் வெளியான MySQL பற்றிய கட்டுரைகளுடன், மேலும் புதிய பகுதிகளை இணைத்து
ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
kaniyam.com/mysql-book-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும்.
இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.
ஆசிரியர்
ஸ்ரீனி
கணியம்
editor@kaniyam.com
Reviews
There are no reviews yet.