Description
ஏற்காடு இளங்கோ
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
ஒருவர் சேலத்திலிருந்துச் சென்னைக்குப் பேருந்தில் பயணம் செய்தால் 8 மணி நேரம் ஆகிறது. அவர் சென்னையிலிருந்து புதுடெல்லிக்கு ரயிலில் பயணம் செய்தால் 32 மணி ஆகிறது. இதுவே விமானத்தில் சென்றால் 2 மணி நேரம் ஆகிறது. வேகம் அதிகரிக்கும் போது நேரம் குறைகிறது. இதே நபர் விண்வெளிக்குச் செல்வதாக வைத்துக் கொண்டால் அவர் 5 நிமிடத்தில் விண்வெளிக்குச் சென்று விடுவார். விண்வெளி 200 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. ஆனால் விமானத்தில் செல்ல முடியாது. புவி ஈர்ப்பு விசையை மீறி மணிக்கு 28000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் தான் விண்வெளியை அடைய முடியும். ஆனால் விண்வெளிப் பயணம் என்பது எளிதான பயணம் அல்ல. அங்கு பயணம் செய்வதற்கு முன்பு ஒருவர் இரண்டு ஆண்டு காலம் கடுமையான பயிற்சி எடுக்க வேண்டும். விண்வெளிப் பயணம் எப்படிப்பட்டது என்பதை இந்த சிறு புத்தகத்தின் மூலம் விளக்கியுள்ளேன். இது மாணவர் சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு உதவிகள் புரிந்த என் மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றி. இப்புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த திருமிகு. சரவணமணியன் அவர்களுக்கும், புத்தகத்தைச் தட்டச்சுச் செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்ட FreeTamilEbooks குழுவிற்குஎனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்…
ஏற்காடு இளங்கோ
yercaudelango@gmail.com
அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com
அட்டைப்பட மூலம் – http://www.superbwallpapers.com/minimalistic/space-shuttle-16092/
மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com
யுனுகோட் மாற்றம் – மு.சிவலிங்கம் musivalingam@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Reviews
There are no reviews yet.